இனி நான் எழுத இருக்கும் எல்லாப் பதிவுகளோடும் ஒரு ஒலி இணைப்பைத் தரப்போகிறேன். அந்த ஒலி இணைப்பில் நீங்கள் அந்தப் பதிவை, என் குரலில் கேட்கலாம். வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்றால், இது மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். எனக்கும் வாசிப்பது நல்ல பயிற்சியாக இருக்கும்.
எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் நிறைய புத்தகங்கள் இருக்கும், பொழுது போகவில்லை என்று சொல்லவே அவசியம் இல்லை, அத்தனை புத்தகங்களை என் அப்பா வாங்கி வைத்திருக்கிறார், உட்கார்ந்து படித்தால் படித்துக் கொண்டே இருக்கலாம்.
அந்த அறைக்குள் போன என் தம்பி, நேற்று புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான், என் அம்மாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தாங்க நல்லாப் படிங்க, என்று கொடுத்தான்.
அந்தப் புத்தகத்தின் விபரங்கள் கீழ்வருமாறு:
தலைப்பு: நல்ல மனைவியாக இருப்பது எப்படி?
ஆசிரியர்: மு.முத்துக்காளத்தி எம்.ஏ.
பதிப்பகம்: கண்ணம்மாள் பதிப்பகம்.
முதற்பதிப்பு: 1984
விலை: ஒன்பது ரூபாய் (வெறும் ஒன்பது ரூபாயா? என்று நினைத்துக் கொண்டேன் நான், முன்பெல்லாம் சம்பளமும் குறைவு, விலையும் குறைவு தானே, அதான் போலும் என்று நினைத்துக் கொண்டேன்)
என் அம்மா, போடா இதெல்லாம் படிக்கணும்னு அவசியம் இல்ல எனக்கு, என்று சொல்லிவிட்டார், என் தம்பியிடம். நான் தான் விடுமுறையில் இருக்கிறேனே, ஏதாவது படிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இந்தப் புத்தகத்தைப் படிப்போமே என்று தோன்றியது, சரி, என்று படிக்கத் தொடங்கினேன்.
என் அப்பா அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார் போலும், (அப்பா எதற்கு இந்தப் புத்தகம் படித்தார் என்று தெரியவில்லை, ஒருவேளை என் அம்மா அதில் சொன்னது போலெல்லாம் இருக்கிறாரா என்று பார்பதற்காக இருக்குமோ? - என்று நினைத்துக் கொண்டேன்) நிறைய இடங்களில் பிடித்த வரிகளை எல்லாம் அடிக்கோடிட்டிருந்தார், "முத்துக்காளத்தியின் ஐம்பது முத்துக்கள்" என்று புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதி இருந்தார், உள்ளே, ஐம்பது முக்கிய, அவருக்குப் பிடித்த விஷயங்களை அடிக்கோடிட்டு ஒன்று, இரண்டு என்று ஐம்பது வரை குறித்து வைத்திருந்தார். ஆங்காங்கே, அருமை, உண்மை என்றெல்லாம் கருத்து எழுதி வைத்திருந்தார்.
நான் முழு புத்தகத்தையும் படிக்காமல், அப்பா அடிக்கோடிட்டிருந்த வரிகளை மட்டுமே படித்தேன். நன்றாகத் தான் இருந்தது, அதில் குறிப்பிட்டது போல் மனைவி இருந்தால், உறுதியாக குடும்பத்தில் சண்டையே வராது தான், ஆனால், மனைவி பெரிய தியாகியாக இருக்க வேண்டும் அப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்றால்.
மனைவி தனது உணர்வுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். இப்படித் தான் பட்டது எனக்கு, அந்தப் புத்தகத்தை வாசித்த போது.
நமக்குப் பிடித்தவருக்காக எதையும் செய்யலாம் தான். கணவனுக்கு அடிமையாய் மனைவி இருக்க வேண்டும். ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவருக்காக, குழந்தைகளுக்காக தன் வாழ்வை வாழ வேண்டும், தனக்காக அல்ல.
இப்படி ஒரு மனைவி இருந்துவிட்டால், அதை விட என்ன வேண்டும் ஒரு கணவனுக்கு?
நீங்கள் கேட்கலாம், என்னமா, மனைவி, பெண் அடிமையாக இருக்க வேண்டும் என்கிறாய் என்று.
உண்மை, அடிமையாகத் தான் இருக்க வேண்டும். அன்பானவருக்கு, நமக்கு விருப்பமானவருக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு பெரும் இன்பம் இருக்கும், அது உணர்ந்தால் உங்களுக்குப் புரியும்.
என் அம்மாவிற்கு ஏன் வாசித்துக் காட்டினேன் என்றால், அந்த ஐம்பது வரிகளும் அப்பாவின் ஆசைகள் அல்லவா? அவற்றை அம்மா அறிந்தே தீர வேண்டும் தானே? அதனால் தான்.
என் அம்மா, "அடிமையாய் நான் இருப்பேன்" என்றார். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன், ஏன் அப்படி? என்று கேட்டேன், அதில் இன்பம் இருக்கிறது என்றார்.
அதுவும் உண்மை தானே?
ஆனாலும், அந்த ஐம்பது வரிகளோடு, என் அம்மா தனது சில ஆசைகளையும் சொன்னார். அதை ஒரு தொடர்பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். இது அதன் தொடக்கம். இன்னும் எப்படியும் ஒரு ஐந்து பதிவுகள் எழுதுவேன், ஒவ்வொரு பதிவுக்கும் - என் அப்பா அடிக்கோடிட்ட பத்து முத்துக்கள், பிறகு அதோடு என் அம்மாவின் விருப்பங்கள் என்று இணைத்துத் தொகுத்து.
இது அவசியம் என்று எனக்குப்படுகிறது, ஏனென்றால், இப்போது நானே பார்க்கிறேன், நிறைய பேர், என் அக்கம் பக்கத்தில், திருமணம் ஆகி இரண்டு மூன்று வருடங்களில், ஏன், சில மாதங்களில், ஏன் சில நாட்களில் விவாகரத்து என்று செல்கிறார்கள். அப்படி நான் பார்த்த ஒரு வீட்டில், இரு சிறு பிள்ளைகள், பாவம் அந்தப் பிள்ளைகள் ஒவ்வொரு முறை தன் அம்மா அப்பா சண்டையிடும் போது, செய்வதறியாது அழுவதைப் பார்த்தால், அத்தனை பாவமாக இருக்கும். அப்பா அம்மாவை அடிக்கிறார், நடுவே சென்றால், பிள்ளைகளையும் அடிக்கிறார், பிள்ளைகள் என்ன செய்வார்கள் பாவம்? அப்பாவும் அம்மாவும் பேசுவதே கிடையாது! அப்படி ஒரு வீட்டில், பிள்ளைகள் எவ்வளவு பாவம்?
கொஞ்சம் வயதுக்கு மீறி இந்தப் பதிவு எழுதுகிறேனோ என்று படுகிறது எனக்கு, ஆனாலும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவு ஒரு மகள், அம்மா, அப்பா. இவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் கலந்ததாக இருக்கும்.
இருபது வருடங்களாக ஒன்றாய் இருந்த, ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், எண்ணங்களாக இருக்கும், முத்துக்காளத்தியின் முத்துக்களையும் உள்ளே இணைத்து.
இது பெரும்பாலும், ஒரு மகளின் பார்வையில் அமையும்.
முத்துக்காளத்தியின் முத்துக்களோடு வாசிக்கலாம் நீங்கள், அடுத்த பதிவில் இருந்து.

ஒரு பெண் - கணவருக்காக, குழந்தைகளுக்காக தன் வாழ்வை வாழ வேண்டும், தனக்காக அல்ல.இது தான் அந்தப் புத்தகத்தின் கருவாக எனக்குப்பட்டது, ஆனால், அந்தப் புத்தகத்தில், கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. நிறைய விஷயங்கள் எனக்கு சரியாகவும் படவில்லை. என் அம்மாவுக்கு வாசித்துக் காட்டினேன் அந்த ஐம்பது அடிக்கோடிட்ட வரிகளையும், என் அம்மாவும் ஒப்புக் கொண்டார் அந்தக் கருத்துக்களை.
என் அம்மாவிற்கு ஏன் வாசித்துக் காட்டினேன் என்றால், அந்த ஐம்பது வரிகளும் அப்பாவின் ஆசைகள் அல்லவா? அவற்றை அம்மா அறிந்தே தீர வேண்டும் தானே? அதனால் தான்.
என் அம்மா, "அடிமையாய் நான் இருப்பேன்" என்றார். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன், ஏன் அப்படி? என்று கேட்டேன், அதில் இன்பம் இருக்கிறது என்றார்.
அதுவும் உண்மை தானே?
ஆனாலும், அந்த ஐம்பது வரிகளோடு, என் அம்மா தனது சில ஆசைகளையும் சொன்னார். அதை ஒரு தொடர்பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். இது அதன் தொடக்கம். இன்னும் எப்படியும் ஒரு ஐந்து பதிவுகள் எழுதுவேன், ஒவ்வொரு பதிவுக்கும் - என் அப்பா அடிக்கோடிட்ட பத்து முத்துக்கள், பிறகு அதோடு என் அம்மாவின் விருப்பங்கள் என்று இணைத்துத் தொகுத்து.
இது அவசியம் என்று எனக்குப்படுகிறது, ஏனென்றால், இப்போது நானே பார்க்கிறேன், நிறைய பேர், என் அக்கம் பக்கத்தில், திருமணம் ஆகி இரண்டு மூன்று வருடங்களில், ஏன், சில மாதங்களில், ஏன் சில நாட்களில் விவாகரத்து என்று செல்கிறார்கள். அப்படி நான் பார்த்த ஒரு வீட்டில், இரு சிறு பிள்ளைகள், பாவம் அந்தப் பிள்ளைகள் ஒவ்வொரு முறை தன் அம்மா அப்பா சண்டையிடும் போது, செய்வதறியாது அழுவதைப் பார்த்தால், அத்தனை பாவமாக இருக்கும். அப்பா அம்மாவை அடிக்கிறார், நடுவே சென்றால், பிள்ளைகளையும் அடிக்கிறார், பிள்ளைகள் என்ன செய்வார்கள் பாவம்? அப்பாவும் அம்மாவும் பேசுவதே கிடையாது! அப்படி ஒரு வீட்டில், பிள்ளைகள் எவ்வளவு பாவம்?
கொஞ்சம் வயதுக்கு மீறி இந்தப் பதிவு எழுதுகிறேனோ என்று படுகிறது எனக்கு, ஆனாலும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவு ஒரு மகள், அம்மா, அப்பா. இவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் கலந்ததாக இருக்கும்.
இருபது வருடங்களாக ஒன்றாய் இருந்த, ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், எண்ணங்களாக இருக்கும், முத்துக்காளத்தியின் முத்துக்களையும் உள்ளே இணைத்து.
இது பெரும்பாலும், ஒரு மகளின் பார்வையில் அமையும்.
முத்துக்காளத்தியின் முத்துக்களோடு வாசிக்கலாம் நீங்கள், அடுத்த பதிவில் இருந்து.
நமது அடையாளத்தை இழக்காமல் நம் அன்பிற்கு உரியவருக்கு அடிமையாக இருக்கலாம். அது நடைமுறையில் சாத்தியமா?
பதிலளிநீக்கும்ம் இருக்கலாம், நம் அன்பிற்கு உரியவரும் நம்மை நேசிக்கும் போது!
நீக்குஇல்லையா அம்மா?
நன்றி.
unga veetukulla orukka varanum :P
பதிலளிநீக்குஎதுக்குணா?
நீக்குமறைந்த திரு முத்துக்காளத்தி அவர்களைப் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்ச தந்திரக்கதை என்ற நூலினை மறு பதிப்பு செய்வது சம்மந்தமாக எங்கள் அலுவலகத்திற்கு வருவார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அவர்.மிகவும் அன்பாக பழகக் கூடியவர்.நல்ல ஆரோக்கியமான உடலும் கம்பீரமான தோற்றமும்,சிரித்த முகமும் கொண்டவர்.அவர் திடீரென மாரடைப்பில் காலமானது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
பதிலளிநீக்குநல்லவர்கள் என்றுமே மறைவதில்லை தானே, ஐயா. இதோ இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் பேச்சில் வாழ்கிறார் தானே?
நீக்குநன்றி...
i need newly married wife charactor you says amma charactor she is god no dought
பதிலளிநீக்கு