முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கண்மணி Diary 2018

எப்போதும் வருடம் முடியும் சமயம் ஒரு ஞான உதயம் வரும், அது என்ன என்றால், blogஇல் எழுத வேண்டும் என்பது. இப்போது 2018 ஆம் வருடம் முடிய இருப்பதால் அந்த ஞான உதயம் வந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை! என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன், எல்லாம் என்றால், எல்லாம் இல்லை, ஒரு சிலவற்றை. எனக்கே நான் எவ்வளவு மாறி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கையில் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்களே அது போல, என் அப்பா எவ்வளவு மாறி இருக்கிறார், என் குடும்பம், என் priorities, எனக்கு முக்கியமானவை, எனக்கு முக்கியமானவர்கள், என்று எவ்வளவு மாற்றம்! ஆனால், எல்லாமே மாறிவிடுமா? இல்லை, நிறைய விஷயங்கள் இன்னும் மாறாமல் தான் இருக்கின்றன. நான் இதற்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமாக இருக்கிறேன், புதிதாக நிறைய படித்து கற்றுக்கொண்டு இருக்கிறேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே பிடித்த விஷயங்கள். இந்த 2018ஆம் வருடம் வாழ்க்கையில் இது வரை இருந்ததிலேயே மிகவும் கடினமான வருடம், அதே நேரம் இனிமையான வருடம்! இன்பம் துன்பம் இரண்டையும் குற
சமீபத்திய இடுகைகள்

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

  "என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ?  21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!) சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.    சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்! இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லா

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா

முதல் நாள் அன்று!

[ சின்ன சின்ன ஆசை  பதிவின் தொடர்ச்சி ] நான் இருந்த அப்பார்ட்மெண்ட் வீடு மிகவும் பெரியது! பொதுவாகப் பார்த்தால், அவ்வளவு ஒன்றும் பெரியது இல்லை, ஆனால், நான் சென்னையில் இருந்த ஒரே ஒரு புறா கூண்டு ஹாஸ்டல் அறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிக மிக மிகப் பெரியது! உள்ளே நுழைந்ததும், ஏதோ இங்லிஷ் பேய் படத்தில் வரும் வீட்டில் நுழைவது போலவே இருந்தது! ”அச்சச்சோ...! இந்த வீட்ல நான் தனியா இருக்கனுமா? ரெண்டு மாசமா?”  பெட்டி படுக்கையை எல்லாம் வைத்துவிட்டு, பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைத்தேன். நல்ல, பசி, ஒரே ஒரு வாழைப் பழம் மட்டும் சாப்பிட்டேன். நீண்ட பயணம், கிட்டத்தட்ட இந்தியாவில் இருந்து கிளம்பி இரண்டு நாட்கள் ஆகி இருக்கும்! அமெரிக்காவில் இரவு ஒரு மணி, ஆனால் எனக்கு தூக்கமே வரவில்லை, இந்தியாவில் பகல் நேரம் ஆச்சே அது! ”ஜெட் லேக்” “ஜெட் லேக்” என்றார்களே அது இது தானா? தூக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருந்தேன். திடீரென, என் வீட்டிற்குள் யாரோ நடப்பது போல இருந்தது! தனியாக நான் மட்டும் தானே இருக்கிறேன்! எப்படி? யார்? பிரம்மையாக இருக்குமோ? இருக்கும் இருக்கும்! மீண்டும் யாரோ என் வீட்

சின்ன சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை....!

எல்லோருக்கும் இருக்கும் ஆசை தான். அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. எல்லோருக்கும் இருக்குமா இந்த ஆசை என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக பெரும்பாலானோருக்கு இருக்கும் என்று நம்புகிறேன் (சரி, யாருக்கு இருக்குதோ இல்லையோ, எனக்கு இருக்குது, இருந்தது!). எவ்வளவு ஆசையோ, அவ்வளவு பயம்! ”என்னதான் ஆசை!” என்கிறீர்களா? இந்நேரம் தலைப்பை வைத்தே புரிந்து இருக்கும், இருந்தாலும் சொல்வது அடியேனின் கடமை! விமானத்தில் பறப்பது! ம்ம், எல்லோருக்குமே இருக்கும் ஆசை தானே! அடிக்கடி பறப்பவர்களுக்குப் பறந்தவர்களுக்கு இருக்காது, என்னைப் போல பறக்க வாய்ப்பே (சிலருக்குப் பணமும்) இருந்திராதவர்களுக்கு இருக்கும்! நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், ”பணமா இல்ல, மதுரையில இருந்து சென்னைக்கு flightல போலாமே...?” என்று, ”வாஸ்தவம் தான், அப்பாகிட்ட கேட்டா கூட்டிட்டுப் போவாங்க தான், பணம் தருவாங்க தான்...” ஆனால், ட்ரெயின், பஸ் என்று 400 ரூபாய்க்குப் போகும் இடத்தில் பல ஆயிரம் கொடுத்துப் போக மனம் ஒருபோதும் வந்ததில்லை, ஒவ்வொரு பைசாவும் அப்பா சம்பாத்தியம் ஆயிற்றே! (மேலும், சாப்பாடு தவிர்த்து வேறு எதற்கும் அதிகம் செலவு செய்யப் பிடிக்

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்…. ”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம். Courtesy:   தோசை அம்மா தோசை! பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்குறிப்